ஜில்லா, வீரம் பயங்கர லாஸ் - திகைக்க வைத்த தயாரிப்பாளர்
, வியாழன், 20 பிப்ரவரி 2014 (10:15 IST)
இந்த வருடம் வெளியான படங்களில் ஜில்லா, வீரம், கோலிசோடா மூன்றும் லாபம் சம்பாதித்த படங்கள் என்றுதான் அனைவரும் நினைத்திருந்தனர். ஜில்லாவும், வீரமும் 100 கோடி அளவுக்கு வசூலித்தது என்றே படம் சம்பந்தப்பட்டவர்கள் பெருமை அடித்தனர்.
ஜில்லாவை இயக்கிய நேசன் துப்பாக்கியைத் தாண்டி ஜில்லா வசூலித்தது என்றார். ஆனால் அவையெல்லாம் பொய் என்கிறார் இந்த தயாரிப்பாளர். அவர், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் கேயார்.