இந்தியன் 2 படத்தில் இருந்து விலகப் போகிறாரா ஷங்கர்- அதிர்ச்சி தகவல்!

Webdunia
சனி, 18 ஜூலை 2020 (09:52 IST)
இந்தியன் 2 படத்தில் இருந்து தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இயக்குனர் ஷங்கர் விலக முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

3 ஆண்டுகளுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட இந்தியன் திரைப்படம் பல இழுபறிகளுக்கு பிறகு ஒரு வழியாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது. ஆனாலும் பல பிரச்சனைகளால் படப்பிடிப்பு ஆமைவேகத்தில் நடந்தது. கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம், பிக்பாஸ் போன்ற காரணங்கள் சொல்லப்பட்டாலும் ஷங்கருக்கும் தயாரிப்பாளருக்கும் பட்ஜெட் தொடர்பாக பிரச்சனை நீடித்து வருவதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தளத்தில் நடந்த கோர விபத்தில் 3 பேர் பலியானதை அடுத்து மிகப்பெரிய சர்ச்சைகளோடு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்றே தெரியாத நிலையில் கொரோனா வைரஸ் பரவல் அச்சத்தால் ஒட்டு மொத்த திரையுலகமும்  முடங்கியுள்ளது.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் பட்ஜெட்டை தடாலடியாக தயாரிப்பு நிறுவனம் குறைக்க சொல்லி உத்தரவு போட ஷங்கர் அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் படத்தில் இருந்தே அவர் விலக முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இலங்கையில் தோழிகளுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்தாரா ராஷ்மிகா மந்தனா? எப்போது திருமணம்?

நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.. அஜித் ரசிகர் மன்றத்தை கலைச்சதுக்கான காரணம்

நேரம் பார்த்து காத்திருந்த ரஜினி! தட்டி தூக்கிட்டாருல.. யாரும் எதிர்பார்க்காத விஷயம்

யோகிபாபு ஒரு இன்ஸ்டால்மென்ட் நடிகர்.. புரமோஷன் விழாவில் கலாய்த்த கிச்சா சதீப்..!

துப்பாக்கி கொடுத்த விஜய்கூட சும்மா இருக்காரு.. சிவகார்த்திகேயனை பொளக்கும் ரசிகர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments