சமந்தா விடுத்த சவாலை ஏற்ற நடிகை ராஷ்மிகா மந்தனா...!

Webdunia
சனி, 18 ஜூலை 2020 (08:51 IST)
கொரோனா லாக்டவுன் விடுமுறையில் மற்ற நடிகைகள் போல் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடாமல் தொடர்ந்து உருப்படியான வேலைகளை செய்து வருகிறார் சமந்தா. வீட்டிலேயே விவசாயம், யோகா ஆகியவற்றில் ஈடுபட்டு வரும் சமந்தா இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் என்பதும், இவை அனைத்தும் வைரலாகியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மாமனார் நாகார்ஜுனாவுடன் இணைந்து செடிகளை பராமரிக்கும், வீடியோ ஒன்றை நடிகை சமந்தா தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  செடிகளை பராமரிக்கும் சேலஞ்சை ராஜ்யசபா எம்பி சந்தோஷ்குமார் அவர்கள் தான் சமந்தாவுக்கு கொடுத்தார். அந்த சேலஞ்சை நிறைவேற்றிய சமந்தா, தனது தரப்பில் இருந்து கீர்த்திசுரேஷ், ராஷ்மிகா , தோழி ஷில்பா ரெட்டி மற்றும்  ரசிகர்களுக்கு மூன்று செடிகள் நட்டு, அதனை பராமரிக்க வேண்டும் என்றும் சமந்தா கேட்டுக்கொண்டார்.

சமந்தாவின் இந்த கோரிக்கையை ஏற்ற ராஷ்மிகா மந்தனா தன் வீட்டு தோட்டத்தில் செடி நட்டுவைத்த வீடியோவை ட்ட்விட்டரில் வெளியிட்டு நடிகைகள் ராஷி கண்ணா, கல்யாணி பிரியதர்ஷன் , ஆஷிகா ரங்கநாத் ஆகிய மூவரையும் நாமினேட் செய்துள்ளார். ஒரு சங்கிலி கோர்வையாக நடைபெற்று வரும் இந்த நல்ல காரியத்திற்கு பலதரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்