வெ.கே.எ.த. போட்டோசெஷன் நடைபெற்றது. (அடுத்த படத்துக்காவது தலைப்பு சின்னதா வைங்க தபூ சார்).
ஹீரோயின் வெண்ணிலாவை வெட்கத்தோடு ஹீரோ ராமகிருஷ்ணனின் கன்னத்தில் முத்தமிடச் சொன்னாராம் இயக்குனர் தபூ. ஆனால் வெட்கப்பட்டது புதுமுகம் வெண்ணிலா இல்லீங்க. ஹீரோ ராமகிருஷ்ணன்தானாம்.
என்னதான் அறிமுகம் இல்லாத புதுசாக ஒரு பொண்ணு முத்தம் கொடுக்க வந்தா கூச்சம் வராதா என்ன வெட்கப்படுகிறார் ஹீரோ. (அறிமுகமான பொண்ணுன்னா ஓகேயா?).
படத்தின் தலைப்புக்கு ஏற்றபடியே போட்டோசெஷன் உட்பட வெட்கம் பொங்கி வழிகிறது. கதையும் அப்படி அமைந்துவிட்டால் தியேட்டரும் பொங்கி வழியும். வாழ்த்துகள் தபூ சார்.