Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய்யின் ஜில்லாவுக்காக மொட்டை போட்ட இயக்குனர்

விஜய்யின் ஜில்லாவுக்காக மொட்டை போட்ட இயக்குனர்
, சனி, 24 ஆகஸ்ட் 2013 (11:35 IST)
FILE
நினைத்தது கிடைக்காவிட்டால் கிடைத்ததை நினைத்துக் கொள்ள வேண்டியதுதான் என்ற நடைமுறை தத்துவத்துக்கு தன்னை தகவமைத்து கொண்டிருக்கிறார் இயக்குனர் ரவிமரியா. இனி இவரை இயக்குனர் என்று அழைப்பதைவிட நடிகர் என்பதே சரியாக இருக்கும்.

ஆசை ஆசையாய், மிளகா என இரு படங்களை இயக்கினார் ரவிமரியா. இரண்டுமே சுமார். அதேநேரம் நண்பர்களுக்காக சினிமாவில் நடிக்க ஆரம்பித்து, அட, இயக்கத்தைவிட நடிப்பு நல்லா வருதே என்று சுற்றியுள்ளவர்கள் உசுப்பேற்றி முழுநேர நடிகராகிவிட்டார். மாத்தியோசி படத்தில் பெண்மை கலந்த வேடத்தில் ரவிமரியாவின் நடிப்பு கலக்கல். என்னா வில்லத்தனம் என ஆச்சரியப்படுகிற விதத்தில்தான் இருந்தது இவரின் வத்திக்குச்சி நடிப்பும்.

தமிழில் நடித்து வந்தவர் இப்போது மலையாளம், தெலுங்கு என்று நடிப்பு ஏரியாவை விஸ்தாரித்திருக்கிறார். தமிழில் பல படங்கள். முக்கியமாக ஜில்லா. இந்தப் படத்தில் கதைக்கு மொட்டை போட வேண்டும் என்றதும் யோசிக்காமல் மொட்டை போட்டிருக்கிறார். அதாவது, நடிப்புதான் இனி எல்லாம் என்பதை ரவிமரியாவின் மொட்டை தெளிவுப்படுத்தியிருக்கிறது.

ஜில்லாவில் விஜய்யுடன் மோகன்லால், பூர்ணிமா, காஜல் அகர்வால் நடிக்கிறார்கள். டி.இமான் இசையமைக்க நேசன் படத்தை இயக்கி வருகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil