சினிமாவில் எல்லோரும் மோசமானவர்கள், எனக்குக் கிடைத்ததெல்லாம் கசப்பான அனுபவங்கள், சந்நியாசம் போகிறேன் என்று ரசிகர்களின் நெஞ்சில் கனல் அள்ளிப் போட்ட தனுஸ்ரீ தத்தா தனது முடிவை மறுபரிசீலனை செய்திருக்கிறார். திடீரென்று நல்லவர்கள் யாரையாவது சந்தித்தாரா?
அப்படியெல்லாம் இல்லை. மோசமானவர்கள் மட்டுமே இருக்கும் சினிமாவில் நடிக்க தனுஸ்ரீ-யின் தங்கை ஆசைப்படுகிறார். தங்கையின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு சந்நியாசத்தை தள்ளி வைத்து மீண்டும் சினிமாவுக்கு திரும்பியிருக்கிறார். தான் பெற்ற மோசமான அனுபவம் தங்கைக்கும் கிடைக்கட்டும். என்னவொரு பெருந்தன்மை.
கன்னடத்தில் தனுஸ்ரீ-யின் தங்கை இஷிதா தத்தா ஏனிது மனசல்லி என்ற படத்தில் அறிமுகமாகிறார். ஆடித்தள்ளுபடியாக தனுஸ்ரீ-யும் சின்ன ரோலில் நடிக்கிறாராம்.