பிதா மகனுக்கு பிறகு பாலாவோடு இணைந்த ஒளிப்பதிவாளர்!

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (14:59 IST)
சூர்யா பாலா இணையும் படத்தின் ஒளிப்பதிவாளராக பாலசுப்ரமணியம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இயக்குனர் பாலா இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் நாச்சியார். அதன் பிறகு அவர் இயக்கிய வர்மா திரைப்படம் தயாரிப்பாளரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு வேறொரு இயக்குனரை வைத்து முழுப் படத்தையும் எடுத்து ரிலீஸ் செய்தனர்.

இதையடுத்து இயக்குனர் பாலாவின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு எழுந்தது. அந்த படத்தை நடித்து தயாரிக்க உள்ளார் சூர்யா. இதற்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வந்த நிலையில் இப்போது இன்று முதல் படப்பிடிப்பு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பாலசுப்ரமணியம் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர் ஏற்கனவே பாலாவோடு பிதாமகன் படத்தில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினிகாந்தின் 'படையப்பா: மறுவெளியீட்டில் இத்தனை கோடி வசூலா? ’கில்லி’ வசூலை தாண்டுமா?

பிரபல இயக்குனர்- மனைவி என இருவரும் கத்தியால் குத்திக்கொலை.. திரையுலகம் அதிர்ச்சி..!

தமிழ்நாட்டில் ‘தமிழ் வாழ்க’.. தெலுங்கு மாநிலங்களில் 'தெலுங்கு வாழ்க': சிவகார்த்திகேயன் குழப்பம்!

இவ்ளோ சினிமா பேசுறேன்.. இத என்னால செய்ய முடியல.. கமலுக்கு இருந்த வருத்தம்

என்னது ‘காதல் கோட்டை 2’வா? புது ட்விஸ்ட்டால இருக்கு.. தயாரிப்பாளரே சொல்லிட்டாரே

அடுத்த கட்டுரையில்
Show comments