Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்ன அவங்க பேர முதல்ல போட்றீங்க… கே வி ஆனந்திடம் கேள்வி எழுப்பிய பாடல் ஆசிரியர்!

Advertiesment
என்ன  அவங்க பேர முதல்ல போட்றீங்க… கே வி ஆனந்திடம் கேள்வி எழுப்பிய பாடல் ஆசிரியர்!
, வியாழன், 15 டிசம்பர் 2022 (17:10 IST)
தமிழ் சினிமாவில் முக்கிய கமர்ஷியல் இயக்குனராக வலம் வந்தவர் கே வி ஆனந்த். அயன், கோ உள்ளிட்ட படங்களின் இயக்குனரும், முதல்வன், சிவாஜி உள்ளிட்ட ஏராளமான படங்களின் ஒளிப்பதிவாளருமான கே வி ஆனந்த் கடந்த மே மாதம்  மாரடைப்பால் காலமானார்.

இவரின் பெரும்பாலான படங்களில் எழுத்தாளர்கள் சுபா திரைக்கதை வசனத்தில் பங்காற்றினார்கள். அவர்களின் முக்கியத்துவத்துக்காக போஸ்டர்களில் இயக்குனருக்கு அடுத்த இடத்தில் போட்டுள்ளார். இதைப் பார்த்து கடுப்பான ஒரு மூத்த பாடல் ஆசிரியர் “என் பெயருக்கு முன்னால் ஏன் அவர்கள் பெயரை போடுகிறீர்கள்” எனக் கேட்டாராம்.

அதற்குக் கேவி ஆனந்த் “நீங்கள் படத்தில் பாடல்கள் மட்டுமே எழுதினீர்கள். அவர்கள் கதை முழுவதும் பங்காற்றியுள்ளார்கள்” எனக் கூறி உறுதியாக இருந்தாராம். இதை எழுத்தாளர்கள் சுபா ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முத்து படத்தில் மீனா வேடத்தில் நடிக்க என்னைதான் ரஜினி கூப்பிட்டார்… மதுவந்தி பகிர்ந்த தகவல்!