சாமி இயக்கத்தில் ராஜ்கிரண், ஸ்ரீதேவிகா, ஆதி நடித்த சரித்திரம் பைனான்ஸ் பிரச்சனையால் முன்னகராமல் பாதியில் நிற்கிறது.
படத்தில் நடித்த ஆதி அய்யனார், பெயரிடப்படாத இரு படங்கள் என பிஸியாகிவிட்டார். ராஜ்கிரணும் சொந்தத் தயாரிப்பில் படம் பண்ணும் முயற்சியில் இருக்கிறார். சாமி மட்டும் சும்மா இருந்தால் எப்படி? சிந்து சமவெளி என்றப் படத்தை புதுமுகங்களை வைத்து தொடங்கயிருக்கிறார்.
உயிர், மிருகம் மாதிரி சிந்து சமவெளியும் வில்லங்கமான சப்ஜெக்டாம். பத்மப்ரியாவை கன்னத்தில் அறைந்த பிறகு சாமி படம் என்றாலே நடிகைகள் ஓடி ஒளிகிறார்கள். இந்நிலையில் சிந்து சமவெளியில் நடிக்க முன் வந்திருக்கிறார் அமலா பால். இவர் கேரளாவைச் சேர்ந்தவர்.
தைரியமாக முடிவெடுத்திருக்கிறார் அமலா பால். சாமியிடம் அடி வாங்கி பால் தயிராகாமல் இருக்க வேண்டும்.