இந்த வெற்றி 12 வருட பசி – சாந்தனு பாக்யராஜ் நெகிழ்ச்சி!

Webdunia
திங்கள், 21 டிசம்பர் 2020 (18:13 IST)
சமீபத்தில் வெளியான பாவக்கதைகள் ஆந்தாலஜி திரைப்பட வெற்றி குறித்து சாந்தனு பாக்யராஜ் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் பாவக்கதைகள் என்ற ஆந்தாலஜி திரைப்படம் வெளியானது. அதில் இடம்பெற்ற நான்கு குறும்படங்களும் ஆணவக்கொலைகளை மையமாக வைத்து உருவாகின. அதில் சுதா கொங்கரா இயக்கத்தில் சாந்தனு, காளிதாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்த திரைப்படம் தங்கம்.

இந்த படம் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது. இதில் நடித்துள்ள சாந்தனு பாக்யராஜ் இந்த வெற்றி குறித்து டிவிட்டரில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ‘ஒரு படத்தின் வெற்றி என்பது இப்படிதான் இருக்குமா? ஏனென்றால் இந்த உணர்ச்சி எனக்கு புதிதாக உள்ளது. இது கிட்டத்தட்ட 12 வருடப் பசி. தங்கம்' படம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.  சுதாவுக்கு நன்றி சொல்லவேண்டும். ஏனென்றால் அவர் நான், காளிதாஸ் மற்றும் பவானி ஆகிய இளம் கலைஞர்களுக்கு வாய்ப்பளித்துள்ளார். எங்களுக்கான நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளார்.’ எனத் தெரிவித்துள்ளார்.சக்கரக்கட்டி திரைப்படம் மூலமாக அறிமுகமான சாந்தனு இதுவரை 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பராசக்தி’ படத்தின் வில்லன் கேரக்டருக்கு முதலில் தேர்வு செய்தது ஜெயம் ரவி இல்லை: சுதா கொங்கரா..

சுற்றி வளைத்த கூட்டம்.. துப்பட்டாவை பிடித்து இழுத்த ரசிகர்கள்.. தர்மசங்கடத்தில் நடிகை நிதி அகர்வால்..!

15 நிமிஷத்துல எல்லா பாடலையும் போட்டுக் கொடுத்த இளையராஜா.. எந்தப் படம் தெரியுமா?

ராஷ்மிகாவை அடுத்து ஸ்ரீலீலா.. டீப் ஃபேக் மூலம் ஆபாச புகைப்படங்களால் அதிர்ச்சி..!

வாயைப் பொளக்க வைக்கும் பட்ஜெட்! சிவகார்த்திகேயனை நம்பி இறங்கும் வெங்கட் பிரபு

அடுத்த கட்டுரையில்
Show comments