காக்க காக்க... சூர்யாவுக்கு பெயர் வாங்கித் தந்த படம். கெளதம் இயக்கிய இந்தப் படத்தை தயாரித்தவர் தாணு.
காக்க காக்க படத்தை இந்தியில் இயக்க வேண்டும் என்பது கௌதமின் விருப்பம். அதை இந்தியில் தயாரிக்க வேண்டும் என்பது தாணுவின் ஆசை. இருவரும் தனித்தனி ரூட்டில் முயன்றதால் ரீமேக் திட்டம் செயல்படுத்தப்படாமல் முடங்கிப் போனது.
சமீபமாக காக்க காக்க ரீமேக் சத்தம் பாலிவுட்டில் கேட்கத் தொடங்கியுள்ளது. இறுதியாக கிடைத்த உறுதியான தகவல், ஜான் ஆபிரஹாம் சூர்யா நடித்த அசிஸ்டெண்ட் கமிஷனர் வேடத்தில் நடிக்கிறார்.
படத்தை இயக்குகிறவர் எவனோ ஒருவன் இயக்குனர் நிஷிகாந்த் காமத். தயாரிப்பவர் விபுல் ஷா. தாணு, கௌதம் இருவருமே இந்தி ரீமேக்கில் இல்லை. விதி வலியது.