Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பல் வலிக்கு சிகிச்சை எடுத்த பிரபல நடிகை… முக அமைப்பே மாறியதில் அதிர்ச்சி!

Advertiesment
பல் வலிக்கு சிகிச்சை எடுத்த பிரபல நடிகை… முக அமைப்பே மாறியதில் அதிர்ச்சி!
, சனி, 18 ஜூன் 2022 (15:03 IST)
பிரபல கன்னட நடிகையான சுவாதி சதீஷ் பல்வலிக்காக தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்றுள்ளார்.

கர்நாடாகவைச் சேர்ந்த நடிகை  சுவாதி, எஃப்.ஐ.ஆர்., 6 டூ 6 உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார். கன்னட சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் 3 வாரத்திற்கு முன்பாக பல் வலி ஏற்பட்டதை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையை சுவாதி சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் பல் வேரை அகற்றும் Root canal சிகிச்சை அளித்துள்ளனர். இதையடுத்து அவருக்கு முக அமைப்பில் மாற்றம் ஏற்பட்டு அதிக அளவு வீங்கியுள்ளது. ஆனால் இந்த வீக்கம் சில நாட்களில் சரியாகிவிடும் என மருத்துவர் கூறியுள்ளார். ஆனால் 3 வாரங்கள் ஆனபின்னரும் அவருக்கு வீக்கம் குறையவில்லை.

இந்நிலையில் முகவீக்கத்துடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள சுவாதி, இது சம்மந்தமாக மருத்துவமனையில் சரியான விளக்கமளிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எப்படி இருக்கு நயன்தாராவின் 'O2' திரைப்படம்?