Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உனக்காக ஒரு கவிதை

Advertiesment
உனக்காக ஒரு கவிதை
, வெள்ளி, 7 ஆகஸ்ட் 2009 (19:54 IST)
குருடனாக இருப்பான். ஆனால் பெயர் கண்ணபிரான் என்று இருக்கும். அதுமாதி‌ரிதான் உனக்காக ஒரு கவிதையும். கவித்துவமாக பெயர் வைத்து கவிச்சியாக சீன் வைத்திருக்கிறார்கள். சாம்பிளுக்கு ஒன்று.

ஹீரோவுக்கு ஹீரோயினை எப்படியும் அடைந்தே தீர வேண்டும். அதற்கு ஹீரோயின் தந்தையை மடக்க வேண்டும். இதுமாதி‌ி கதையுடன் நூறு தமிழ்ப் படங்கள் வந்திருக்கிறது.

காதலியின் அப்பாவின் நன்மதிப்பைப்பெற அவர்கள் வீட்டிற்கு சென்று வேலை செய்யும் ஹீரோவை பார்த்திருக்கிறோம். ஏன், ஹீரோயின் தந்தைக்கு தண்ணி வாங்கித்தரும் ஹீரோவையும் பார்த்திருக்கிறோம். நமது ஹீரோ இன்னும் ஒருபடி மேலே.

காதலியின் தந்தை பார்ப்பதற்கு கவர்ச்சி நடனம் ஏற்பாடு செய்கிறான். கூடவே தண்ணி விருந்து. இந்த காட்சியில் நடிப்பதற்கு ஸா‌ி, ஆடுவதற்கு மலேசியாவிலிருந்து ஜெனிஃபர் என்பரை அழைத்து வந்திருக்கிறார்கள்.

வந்தவர் நமிதா ட்ரெஸ்ஸில் கால்வாசியை இடுப்பில் கட்டிக் கொண்டு ஸ்பாட்டுக்கு வர பதறிவிட்டது யூனிட். இந்த மாதி‌ி வந்தால் சென்சா‌ரில் சிசர் போட்டுருவாங்க என கெஞ்சி கூத்தாடி கூடுதல் துணி உடுத்த வைத்திருக்கிறார்கள். இதில் ஜெனிஃபருக்கு ரொம்ப வருத்தம்.

பேசாமல் உனக்காக ஒரு கவர்ச்சி என்று பெயர் வைத்திருக்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil