இன்று முதல் இந்தி விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. த்ரிஷா ஹீரோயினாக நடிக்க, சிம்பு நடித்த வேடத்தில் பிரதீக் பப்பர் நடிக்கிறார்.
ஆர்எஸ் இன்ஃபோடெயின்மெண்ட், போட்டோன் கதாஸ் மற்றும் மும்பையைச் சேர்ந்த பர்பிள் ஆர்ட்ஸ் மூன்றும் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்திக்காக சில புதிய பாடல்களை அவர் கம்போஸ் செய்துத்தர ஒப்புக் கொண்டிருக்கிறாராம்.
இந்திப் படம் என்றாலும் எடிட்டிங் ஆண்டனி, கலை ராஜுவன், ஒளிப்பதிவு மனோஜ் பரமஹம்சா என கௌதமின் ஆஸ்தான தமிழ் கலைஞர்கள்தான் பணிபுரிகிறார்கள். கட்டா மிட்டாவில் கோட்டைவிட்ட த்ரிஷா இந்தப் படத்தைதான் பெரிதும் நம்பியிருக்கிறார்.