அடிதடியில் இறங்கிய நயன்தாரா
, வெள்ளி, 31 ஜனவரி 2014 (08:02 IST)
இது என்னடா புது வில்லங்கம்? இந்த கேள்வியுடன்தான் உள்ளே வந்திருப்பீர்கள். நீங்கள் நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை. இந்த அடிதடி புதிய படத்துக்காக.
காதல் தோல்விக்குப் பின் நடிக்க வந்த நயன்தாராவுக்கு முதலிரு தெலுங்குப் படங்களும் தோல்வியாக அமைந்தது. அனாமிகாவும் வெளியானால் தெலுங்கை பொறுத்தவரை நயன்தாராவுக்கு நில் போலன்ஸ்.
இந்நிலையில் கோபிசந்த் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. பி.கோபால் இயக்க, ஜெயபாலாஜி ரியல் மீடியா படத்தை தயாரிக்கிறது. இசை மணிசர்மா.