Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ம‌ற்றொரு ஆ‌ட்ட‌த்‌தி‌ல் ஆ‌ஸ்‌ட்ரே‌லியா- இல‌ங்கை மோத‌ல்

Advertiesment
ம‌ற்றொரு ஆ‌ட்ட‌த்‌தி‌ல் ஆ‌ஸ்‌ட்ரே‌லியா- இல‌ங்கை மோத‌ல்
, ஞாயிறு, 9 மே 2010 (10:06 IST)
பா‌ர்படா‌ஸமைதானத்தில் இ‌ன்றஇரவு 11 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்‌ட்ரேலியா - இலங்கை அணிகள் மோதுகின்றன. சூப்பர் 8 சுற்றில் தங்களது தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்ற குதூகலத்துடன் இரு அணிகளும் களம் இறங்குகின்றன.

இலங்கை அணியில் ஜெயசூர்யா, தில்ஷன் அவுட் ஆப் பார்மில் இருந்தாலும், தொடக்க ஆட்டக்காரர் ஜெயவர்த்தனே தொடர்ந்து பிரமாதப்படுத்தி வருகிறார். அவர் இதுவரை 3 ஆட்டத்தில் விளையாடி 279 ரன்கள் குவித்து இருக்கிறார்.

அதே சமயம் ஆஸ்‌ட்ரேலியா அணி பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் மூன்றிலும் வலுவாக இருப்பதால் இந்த மோதல் இலங்கைக்கு கடும் சவாலாக இருக்கும். இரு அணிகளும் இதுவரை 20 ஓவர் கிரிக்கெட்டில் இரண்டு முறை சந்தித்துள்ளன. இதில் தலா ஒன்றில் வெற்றி பெற்றிருக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil