காயமடைந்த பிரட் லீயிற்கு பதிலாக டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கலக்கிய ஆஸ்ட்ரேலிய வேகப்பந்து வீச்சாளர் ரியான் ஹேரிஸ் ஆஸ்ட்ரேலியா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஜிம்பாப்வேயிற்கு எதிராக ஆஸ்ட்ரேலியா அடைந்த பயிற்சி ஆட்டத் தோல்வியின் போது முழங்கையில் மீண்டும் காயமடைந்தார் பிரட் லீ.
இதனால் ஐ.சி.சி. இன்று ரியான் ஹேரிஸை அவருக்கு பதிலாக அணியில் சேர்த்துக் கொள்ள ஆஸ்ட்ரேலிய அணிக்கு ஒப்புதல்தெரிவித்துள்ளது.