Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பயிற்சி ஆட்டத்தில் மே.இ.தீவு படுதோல்வி

Advertiesment
பயிற்சி ஆட்டத்தில் மே.இ.தீவு படுதோல்வி
, வெள்ளி, 30 ஏப்ரல் 2010 (15:30 IST)
மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை 20- 20 கிரிக்கெட் பயி‌ற்‌சி ஆட்டங்களில் நேற்று மேற்கிந்திய அணியை நியூஸீலாந்து அணி வீழ்த்தியது.

முதலில் பேட் செய்த நியூஸீலாந்து பிரெண்டன் மக்கல்லம், ரெட்மாண்ட், வெட்டோரி, ஸ்டைரிஸ், கப்தில், ஹாப்கின்ஸ் ஆகியோர் விக்கெட்டுகளை ஒற்றை இலக்க ரன்களுக்கு இழந்து 37/6 என்று இருந்தது.

ஆனால் அதன் பிறகு ராஸ் டெய்லர் 35 பந்துகளில் 2 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் சகிதம் 50 ரன்களை விளாசினார். ஜேகப் ஓரம் 40 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் சகிதம் 46 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

இதனால் நியூஸீலாந்து 20 ஓவர்களி 124/8 என்ற ஸ்கோரை எட்டியது. மேற்கிந்திய தரப்பில் ஸ்பின் பந்து வீச்சாளர் சுலைமான் பென் 2 விக்கெட்டுகளையும், ராம்பால் 2 விக்கெட்டுகளையும், டேரன் சம்மி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இலக்கைத் துரத்தக் களமிறங்கியபோது சந்தர்பாலும், கெய்லும் இணைந்து துவங்கினர். கெய்ல் அதிரை விளாசலில் ஈடுபட 1 பவுண்டரி 4 சிகர்கள் சகிதம் அவர் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கும் போது ஸ்கோர் 9 ஓவர்களில் 68 ரன்களாக இருந்தது.

பிராவோ 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தபோது ஸ்கோர் 12 ஓவர்களில் 86 ரன்களாக இருந்தது.

ஆனால் அதன் பிறகு சந்தர்பால் ஒரு முனையில் நிற்க அடுத்த 12 ரன்களில் சந்தர்பால் உட்பட மேலும் 3 விக்கெட்டுகள் சரிந்தன.

பிராவோ, சர்வாண், தியோநரைன், சம்மி, ராம்தின் என அனைவரும் ஒற்றை இலக்கத்தில் அடுத்தடுத்து வெளியேற 86/1 என்று இருந்த மேற்கிந்திய அணி 117 ரன்களுக்கு சுருண்டு படு தோல்வி அடைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil