Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தென்ஆப்ரிக்காவை வீழ்த்தி சூப்பர்-8 சுற்றுக்குள் நுழைந்தது இ‌ந்‌தியா

Advertiesment
தென்ஆப்ரிக்காவை வீழ்த்தி சூப்பர்-8 சுற்றுக்குள் நுழைந்தது இ‌ந்‌தியா
செயின்ட்லூசியா , திங்கள், 3 மே 2010 (08:48 IST)
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ரெய்னாவின் அதிரடியான சதத்‌தி‌லஇந்திய அணி வெற்றி பெற்று, முதல் அணியாக சூப்பர்-8 சுற்றுக்குள் நுழைந்தது.

3வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மே‌ற்‌‌‌கி‌ந்‌திய ‌தீ‌‌வி‌ல் நடந்து வருகிறது. இந்திய அணி தனது 2வது மற்றும் கடைசி லீக்கில் நேற்று தென்ஆப்ரிக்காவை செயின்ட் லூசியாவில் சந்தித்தது.

இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. வயிற்று போக்கால் அவதிப்பட்டு வரு‌கவுதம் கம்பீர் பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டார். இதே போல் ஜாகீர்கானுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் பியுஷ் சாவ்லா இடம் பெற்றார்.

பூவதலையவெ‌ன்தென்ஆப்ரிக்க அ‌ணி‌ததலைவ‌ரசுமித் முதலில் இந்தியா பேட் செய்ய பணித்தார். இதை தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த முரளி விஜயும், தினேஷ் கார்த்திக்கும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். முதல் ஓவரிலேயே விஜய் (0) விக்கெட் கீப்பர் பவுச்சரிடம் கேட்ச் ஆகி, ஏமாற்றத்திற்குள்ளானார். அடுத்து சுரேஷ் ரெய்னா களம் புகுந்தார். தினேஷ் கார்த்திக்கும் (16 ரன்) நீண்ட நேரம் நிற்கவில்லை.

'பவர்-பிளை'யான முதல் 6 ஓவர்களில் 5 வேகப்பந்து வீச்சாளர்களை பந்து வீச வைத்த தென்ஆப்ரிக்க அ‌ணி‌ததலைவ‌ரசுமித்தின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது. அது போல் அவர்களின் 'ஷாட்-பிட்ச்' யுக்திக்கும் பலன் தெரிந்தது. ஆனால் இந்த நிலைமை முதல் 8 ஓவர்கள் (43-2) வரை தான்.

3வது விக்கெட்டுக்கு சுரேஷ் ரெய்னாவுடன், யுவராஜ்சிங் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் நிலைமையை படிப்படியாக மாற்றியதோடு, ஆட்டத்தையும் தங்கள் பக்கம் திருப்பினர். யுவராஜ்சிங்கை விட, ரெய்னாவின் தாக்குதல் மிரட்டலாக இருந்தது.

துவக்கத்தில் இருந்தே வெளுத்துக்கட்டிய ரெய்னாவுக்கு, அதிர்ஷ்டமும் பக்கபலமாக இருந்தது. 5 ரன்னில் இருந்த போது கேட்ச் ஆனார். அப்போது அது நோ பால் என்று அறிவிக்கப்பட்டதால் தப்பினார். இதே போல் 47 ரன்களில் இருந்த போது, எளிதான ரன்-அவுட் வாய்ப்பில் இருந்தும், வாழ்வு பெற்றார்.

மறுமுனையில் யுவராஜ்சிங் தன்னால் முடிந்த வரை வேகம் காட்டினார். அவர் 37 ரன்களில் ஆ‌ட்ட‌மஇழ‌ந்தா‌ர். ரெய்னா-யுவராஜ்சிங் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்தது. அத‌ன் ‌பிறகயூசுப் ப‌த்தான் கள‌மஇற‌ங்‌கினா‌ர்.

15 ஓவர்களுக்கு பிறகு ரெய்னாவின் ஆக்ரோஷம், தீவிரமானது. தனது முதல் 3 ஓவர்களை கட்டுக்கோப்புடன் வீசி 2 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்த வேகப்பந்து வீச்சாளர் கிளைன்வெல்த்தின் கடைசி ஓவரை ரெய்னா துவம்சம் செய்தார்.

ஆட்டத்தின் 18வது ஓவரான அதில் முதல் 2 பந்துகளில் பதான் தனது பங்குக்கு சிக்சர், ஒரு ரன் எடுக்க, அடுத்த 4 பந்துகளில் ரெய்னா தொடர்ந்து 3 பவுண்டரி, ஒரு சிக்சர் விரட்டி, ரசிகர்களை குஷிப்படுத்தினார். அந்த ஒரே ஓவரில் 25 ரன்கள் கிடைக்க, இந்தியாவின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. அவர் சதத்தை நெருங்கவும் உதவிகரமாக அமைந்தது.

இதன் பின்னர் ப‌த்தான் 11 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து 6வது விக்கெட்டுக்கு தோ‌னி இறங்கினார். கடைசி ஓவரின் 3-வது பந்தில் ரெய்னா ஒரு சிக்சர் அடித்து, தனது முதலாவது சதத்தை 59 பந்துகளில் நிறைவு செய்தார். 23 வயதான ரெய்னா 20 ஓவர் சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார். ஒட்டுமொத்தத்தில் 20 ஓவர் கிரிக்கெட்டில் சதம் அடித்த 3-வது வீரர் என்ற சிறப்பும் அவருக்கு கிடைத்தது.

செஞ்சுரியை பூர்த்தி செய்த அடுத்த பந்திலேயே கேட்ச் ஆனார். ரெய்னா 60 ப‌ந்‌துக‌ளி‌ல் 101 ரன்க‌கு‌‌வி‌த்தஆ‌ட்ட‌மஇழ‌ந்தா‌ர். இ‌தி‌ல் 9 பவுண்டரி, 5 சிக்சர்க‌ளஅட‌ங்கு‌ம். இதன் பின்னர் தோ‌னி சிக்சருடன் இன்னிங்சை முடித்து வைத்தார்.

இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது. இந்த உலக கோப்பையில் இதுவரையிலான ஆட்டங்களில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். தோ‌னி 16 ரன்களுடன் களத்தில் இருந்தார். முதல் 10 ஓவர்களில் 67 ரன்கள் எடுத்த இந்தியா, 2-வது பாதியில் 119 ரன்கள் விளாசியது. அதுவும் கடைசி 5 ஓவர்களில் மட்டும் 75 ரன்கள் எடு‌த்தது.

அடுத்து 187 ரன்கள் இலக்கை நோக்கி தென்ஆப்ரிக்க அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் போஸ்மன் (8 ரன்) வேகமாக பெவிலியன் திரும்பினாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் காலிசும்,‌‌‌ ‌ஸ்‌மித்தும் நிலைத்து நின்றனர். ஆனால் முதல் 10 ஓவர்களில் (57-1) இவர்கள் ரன்கள் குவிக்க தவறியதால், சிக்கலான நிலை உருவானது.

இதன் பிறகு பிற்பாதியில் ஒவ்வொரு வீரர்களும் தங்களால் முடிந்த வரை துரிதமாக ஆடினார்கள். ‌ஸ்மித் 36 ரன்களும், காலிஸ் 73 ரன்களும் எடுத்து ஆ‌ட்ட‌‌மஇழ‌ந்தன‌ர். இதன் காரணமாக இறுதி கட்டத்தில் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி ஓவரில் தென்ஆப்ரிக்காவின் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டன. கைவசம் 6 விக்கெட்டுகள் இருந்தன. எதிர்பார்ப்பு நிறைந்த 20-வது ஓவரை கட்டுக்கோப்புடன் வீசிய வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ‌்ரா, 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.

தென்ஆப்பிரிக்க அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 172 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இந்திய அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் 2வது வெற்றியை ருசித்தது. ரெய்னா ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் 'சி' பிரிவில் முதலிடத்தை பிடித்த இந்தியா, முதல் அணியாக சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறியது. இப்பிரிவில் கடைசி லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-ஆப்கானிஸ்தான் அ‌ணிக‌ளவரு‌ம் 5ஆ‌மதே‌தி மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இப்பிரிவில் இருந்து சூப்பர்-8 சுற்றுக்கு வரும்.

Share this Story:

Follow Webdunia tamil