Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூப்பர் 8 சுற்றுக்கு செ‌ன்றது மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவு

Advertiesment
சூப்பர் 8 சுற்றுக்கு செ‌ன்றது மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவு
, செவ்வாய், 4 மே 2010 (12:15 IST)
இருபது‌க்கு 20 ஓவ‌ர் ‌கி‌ரி‌க்கெ‌ட் போ‌ட்டி‌யி‌ல் இ‌ங்‌கிலா‌ந்து அ‌ணியை, மே‌ற்‌கி‌ந்‌தி ‌தீவுக‌ள் அ‌ணி ‌வீ‌ழ்‌த்‌தி சூ‌ப்ப‌ர் 8 சு‌ற்று‌க்கு தகு‌தி பெ‌ற்றது.

நே‌ற்‌றிரவு நட‌ந்த 'டி' பிரிவில் நடந்த ஆட்டத்தில் மே‌ற்‌கி‌ந்‌திய தீவு - இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக மோர்கன் 35 பந்துகளில் 55 ரன்களும், ரைட் 25 பந்துகளில் 45 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி விளையாடி முடிந்ததும் மழை குறுக்கிட்டது.

பின்னர் மழை நின்றதும் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 6 ஓவர்களில் 60 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து களம் இறங்கிய மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவுக‌ள் அணி 5.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவுக‌ள் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

Share this Story:

Follow Webdunia tamil