மேற்கிந்திய தீவுகளில் நாளை துவங்கும் 3-வது இருபதுக்கு 20 ஐ.சி.சி. உலகக் கோப்பை போட்டிகளில் சாம்பியன் பட்டம் வெல்ல இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஆஸ்ட்ரேலிய சுழற்பந்து மேதை ஷேன் வார்ன் தெரிவித்துள்ளார்.
"இந்திய வீரர்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிகம் விளையாடியுள்ளனர். பாகிஸ்தான் அணிக்கு வெற்றி வாய்ப்பு ஏனெனில் இந்த வடிவ கிரிக்கெட் அந்த அணிக்கு பொருத்தமானது. ஆனால் ஆஸ்ட்ரேலியா இதில் அதிகம் விளையாடி வருகிறது, மேலும் இந்த வகை ஆட்டம் பற்றி அந்த அணிக்கு நன்றாகத் தெரியும்." என்று கூறினார் ஷேன் வார்ன்.
"எம்.எஸ்.தோனி ஒரு சிறந்த கேப்டன், ஆனாலும் விரேந்திர சேவாகின் இழப்பு மிகப்பெரியது. ஷாகித் அஃப்ரீடியும் ஒரு சிறந்த வீரர், இருப்பினும் பாகிஸ்தான் அணி கலவையான திறமைகளை உடையது." என்றார் ஷேன் வார்ன்.
தனது சிறந்த இருபதுக்கு 20 வீரர்களை பட்டியலிட்டுள்ள ஷேன் வார்ன் அதில் தோனி, ஷேன் வாட்சன், பீட்டர்சன், மலிங்கா, போலார்ட் மற்றும் சேவாக் ஆகியோரை குறிப்பிட்டுள்ளார்.