ஐ.சி.சி. இருபதுக்கு 20 உலகக் கோப்பைக்கு புதிதாக தகுதி பெற்று வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணியை சுல்பமாக எடை போட மாட்டோம் என்று இந்திய அணித் தலைவர் எம்.எஸ்.தோனி தெரிவித்துள்ளார்.
இந்தியா தன் முதல் போட்டியில் மே 1ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணியை சந்திக்கிறது. இதில் ஏதாவது தவறுகள் செய்தால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியாது என்று தோனி வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"என்னைக் கேட்டால் ஆப்கானிஸ்தானுடனான முதல் போட்டியை பயிற்சி ஆட்டமாக ஒரு போதும் கருத இடமில்லை, என் எதிரணினரை நான் சுலபமாக எடைபோடப்போவதில்லை. நாள் முடிவில் அது எந்த அணியாக இருந்தாலும் அதனை வீழ்த்துவதே நோக்கமாக இருக்கவேண்டும்.
எனக்கு அந்த அணி வீரர்களைப் பற்றி அதிகம் தெரியாது. ஒரு அணியினரைப் பற்றி அதிகம் தெரியாமல் இருப்பது நல்லது, ஏனெனில் அதிகம் தெரிந்தால் அவர்களைப் பற்றி அதிகம் சிந்தித்துக் கொண்டிருப்போம், ஆனால் எந்த அணியாக இருந்தாலும் எங்களது தயாரிப்பு சிறந்த அணிக்கான தயாரிப்பாகவே இருக்கும்."
இவ்வாறு கூறினார் தோனி.