Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

20-20 : இலங்கையை வென்றது நியூ ஸீலாந்து

20-20 : இலங்கையை வென்றது நியூ ஸீலாந்து
, சனி, 1 மே 2010 (11:10 IST)
மேற்கிந்தியத் தீவுகளில் நேற்று துவங்கிய இருபதுக்கு 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் முதல் போட்டியில், இல‌ங்கையை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது நியூ ஸீலாந்து.

பூவா - தலையா வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஜெயவர்தனே மட்டுமே சிறப்பாக விளையாடினார். 51 பந்துகளில் 8 பெளண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 81 ரன்களைக் குவித்தார்.

தில்ஷான் (3), சங்ககாரா (4) என மற்ற வீரர்கள் எவரும் சிறப்பாக விளையாடவில்லை. சாண்டிமால் மட்டும் 29 ரன்களைச் சேர்த்தார்.

இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை மட்டுமே எடுத்தது இலங்கை அணி.

இதனையடுத்து களமிறங்கிய நியூ ஸீலாந்து அணியும் சொல்லிக்கொள்ளும்படி சிறப்பாக விளையாடவில்லை. துவக்க ஆட்டக்காரர் மெக்கல்லம் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ரெய்டர் மட்டும் 27 பந்துகளில் 3 பெளண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 42 ரன்கள் எடுத்தார்.

மற்ற வீர்கள் எவரும் நிலைத்து நின்றாடவில்லை. குப்டில் 19, டெய்லர் 9, ஸ்டைரிஸ் 17, வெட்டோரி 17, ஓரம் 15 என ஆட்டமிழந்தனர்.

இறுதியில் 6 பந்துகளில் ஒரு பெளண்டரி, ஒரு சிக்ஸருடன் 16 ரன்கள் எடுத்த மற்றொரு மெக்கல்லத்தில் அதிரடியால் 19.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்களை எடுத்து வெற்றி வெற்றது நியூஸீலாந்து அணி.

ஒரு விக்கெட், 3 கேட்ச், இறுதியில் அதிரடி 16 ரன்கள் எடுத்து என் மெக்கல்லம் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil