வாட்சன், வார்னரின் பேட்டிங் உண்மையிலேயே அபாரமாக இருந்தது என்றும் அவர்கள் இருவரும் ஆட்டத்தை எங்கள் வசம் இருந்து பிரித்து, தங்கள் பக்கம் கொண்டு சென்று விட்டனர் என்று இந்திய அணியின் தலைவர் தோனி கூறினார்.
இந்திய அணி படுதோல்வி அடைந்தது குறித்து தோனி கூறுகையில், தொடக்கத்தில் சில ஓவர்களிலேயே 40 ரன்களுக்கு மேல் விட்டு கொடுத்து விட்டோம். வாட்சன், வார்னரின் பேட்டிங் உண்மையிலேயே அபாரமாக இருந்தது.
அவர்கள் இருவரும் ஆட்டத்தை எங்கள் வசம் இருந்து பிரித்து, தங்கள் பக்கம் கொண்டு சென்று விட்டனர். என்றாலும் இறுதி கட்டத்தில் 184 ரன்களில் கட்டுப்படுத்தியது நல்ல முயற்சியாகும்.
பெரும்பாலான அணிகள் எங்களுக்கு ஷாட் பிட்ச் பந்துகளையே வீசுகின்றன. அந்த மாதிரியான சில பந்துகளை நாங்கள் தொடக்கத்தில் விட்டு இருக்கலாம்.
இனி அடுத்த 2 ஆட்டங்களிலும் கவனம் செலுத்துவோம். இரு ஆட்டங்களிலும் வெற்றி பெறுவது முக்கியமானதாகும் என்றார் தோனி.