Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மே‌ற்‌கி‌‌ந்‌திய ‌தீவு அ‌ணி‌யிட‌ம் இ‌ந்‌தியா தோ‌ல்‌வி

மே‌ற்‌கி‌‌ந்‌திய ‌தீவு அ‌ணி‌யிட‌ம் இ‌ந்‌தியா தோ‌ல்‌வி
, திங்கள், 10 மே 2010 (09:17 IST)
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் சூப்பர்8 சுற்றில் மே‌ற்‌கி‌ந்‌திய ‌‌தீவஅ‌ணியுட‌னஇந்தியா தோல்வி அடைந்தத‌னமூலம் இந்திய அணியின் அரைஇறுதி வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்தது.

பார்படா‌‌சில் நேற்‌றிரவநடந்த 'எப்' பிரிவு ஆட்டத்தில் இந்தியாவும், மே‌‌‌ற்‌கி‌ந்‌திய ‌தீவஅ‌ணியு‌மமோ‌தின. இரு அணிகளும் ஏற்கனவே தங்களது முதலாவது ஆட்டத்தில் தோல்வி அடைந்திருந்ததால் இரு அணிக்குமே இது வாழ்வா?, சாவா? மோதலாக அமைந்தது.

பூவதலையவெ‌ன்இந்திய அணி‌தலைவ‌ரதோ‌னி முதலில் மே‌‌‌ற்‌கி‌ந்‌திய ‌தீவு அ‌ணியபேட் செய்ய கேட்டுக் கொண்டார். இதன்படி கெய்லும், சந்தர்பாலும் மே‌‌‌ற்‌கி‌ந்‌திய ‌தீவு அ‌ணி‌யி‌னஇன்னிங்சை தொடங்கினர். ஆடுகளம் கொஞ்சம் ஈரப்பதமாக இருந்ததால் தொடக்கத்தில் ரன் எடுக்க சிரமப்பட்டனர். குறிப்பாக சந்தர்பால் தடுமாறினார். ஆனால் கெய்ல் தனது வழக்கமான தாக்குதலை அவ்வப்போது தொடுத்தார். இருந்தாலும் 'பவர் பிளை`யான முதல் 6 ஓவர்களில் 31 ரன்களே எடுக்க முடிந்தது.

விக்கெட் விழாததால் அதன் பிறகு அடிக்க ஆரம்பித்தனர். பந்து வீச்சு ஓரளவு நன்றாக இருந்தாலும், பீல்டிங்கில் இந்திய வீரர்கள் சொதப்பினர். சந்தர்பால் 11 ரன்னில் ஆடிக் கொண்டிருந்த போது கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை ஜடேஜா வீணடித்தார். கெய்லுக்கு 46 ரன்னில் இருந்த போது, யூசுப் ப‌த்தான், தோ‌னி இருவரும் கேட்ச் செய்ய முயற்சித்து, மோதி கடைசியில் அந்த கேட்ச்சையும் தவற விட்டனர். இதனை கெய்ல் நன்கு பயன்படுத்திக் கொண்டார்.

அணியின் ஸ்கோர் 80 ரன்களை எட்டிய போது சந்தர்பால் 23 ரன்‌னி‌லஆ‌ட்ட‌மஇழ‌ந்தா‌ர். என்றாலும் கெய்லின் ஆக்ரோஷம் குறையவில்லை. சர்வ சாதாரணமாக சிக்சர் விளாசினார். அதில் ஒரு இமாலய சிக்சர் 112 மீட்டர் தூரத்திற்கு பறந்தது. சந்தர்பாலுக்கு பிறகு வந்த டேரன் சேமி (19), பொல்லார்ட் (17) ஆகியோர் குறுகிய நேரம் நின்றாலும் அதிரடி பங்களிப்பை கொடுத்தனர்.

இதற்கிடையே கெய்ல் சதத்தை நெருங்கினார். ஆனால் அவருக்கு அதிர்ஷ்டமில்லை. கடைசி ஓவரின் 4வது பந்தில் 2வது ரன்னுக்கு ஆசைப்பட்டு அவர் ரன் அவுட் ஆனார். மயிரிழையில் 2வது சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்த கெய்ல் 66 ப‌ந்‌துக‌ளி‌ல் 98 ரன்க‌எடு‌த்தவெளியேறினார். இ‌தி‌ல் 5 பவுண்டரி, 7 சிக்சர்களை ‌விளா‌சினா‌ர்.

அவருடன் சேர்த்து கடைசி ஓவரில் மொத்தம் 3 விக்கெட்டுகள் சரிந்தன. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் அணி 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் ஹர்பஜன்சிங் மட்டுமே சிக்கமாக பந்து வீசினார். ரவீந்திர ஜடேஜா 2 ஓவர் வீசி 27 ரன்களை வாரி வழங்கினார்.

பின்னர் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி விஜயும், கவுதம் கம்பீரும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். வேகப்பந்து வீச்சாளர்கள் மூலம் இந்தியாவுக்கு மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவு அ‌ணி நெருக்கடி கொடுத்தது. குறிப்பாக ஆஸ்‌‌ட்ரேலியாவை போல் 'ஷாட்-பிட்ச்' ஆயுதத்தை பயன்படுத்தி இந்திய பேட்ஸ்மேன்களை காலி செய்தனர்.

ஷாட்டாக பிட்ச் செய்த ஆனால் அதிகம் எழும்பாத பந்தில் விஜய் (7), டீப் ஸ்கொயர் திசையில் கேட்ச் ஆனார். இதே போல் கெமார் ரோச் வீசிய அடுத்த ஓவரில் எகிறி சென்ற பந்து கம்பீரின் (15) குளோவ்சை உரசி செல்ல, அவரது கதையும் கேட்ச்சில் முடிந்தது. அடுத்து வந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் கூட நீண்ட நேரம் நிற்கவில்லை. ரோகித் ஷர்மா 5 ரன்னிலும், ரெய்னா 32 ரன்னிலும், யுவராஜ்சிங் 12 ரன்னிலும், யூசுப் ப‌த்தான் 17 ரன்னிலும் வீழ்ந்தனர்.

இதன் பின்னர் தோனியும், ஹர்பஜன்சிங்கும் அணியை சரிவில் இருந்த மீட்க போராடினர். தோ‌னி களத்தில் நிற்கும் வரை லேசான நம்பிக்கை தெரிந்தது. ஆனால் அவர் 19வது ஓவரில் தேவையில்லாமல் ரன்-அவுட் ஆக இந்தியாவின் கனவு தகர்ந்தது. இவ‌ர் 29 ரன்‌ எடு‌த்தா‌ர்.

கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்ட போது அதில் இந்திய வீரர்களால் ஒரு விக்கெட்டை இழந்து வெறும் 4 ரன்களே எடுக்க முடிந்தது. 20 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. 14 ரன்கள் வித்தியாசத்தில் மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவு அணி வெற்றி பெற்று, தனது அரைஇறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.

சூப்பர்8 சுற்றில் ஏற்கனவே இந்திய அணி ஆஸ்‌ட்ரேலியாவிடமும் தோற்று இருந்ததால், தற்போதைய இந்த தோல்வியின் மூலம் இந்திய அணியின் அரைஇறுதி கனவு ஏறக்குறைய முடிவுக்கு வந்திருக்கிறது.

என்றாலும் இந்திய அணிக்கு இன்னும் ஒரு குட்டி வாய்ப்பு இருக்கிறது. அதாவது ஆஸ்‌ட்ரேலிய அணி தனது எஞ்சிய ஒரு ஆட்டத்தி‌ல் வெற்றி பெற வேண்டும். இதே போல் இலங்கைக்கு எதிரான கடைசி லீக்கில் இந்தியா மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். இவ்வாறு நடக்கும்பட்சத்தில் ஆஸ்‌ட்ரேலியா 3 வெற்றியுடன் அரைஇறுதிக்குள் நுழையும். இந்தியா, இலங்கை, மே‌ற்‌கி‌ந்‌திய ‌‌தீவு அணிகள் தலா ஒரு வெற்றியுடன் இருக்கும். அப்போது ரன்-ரேட் அடிப்படையில் முன்னிலை வகித்தால் இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil