இருபதுக்கு 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூஸீலாந்து அணியிடம் ஒரு ரன்னில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது குறித்து அந்நாட்டு நாடாளுமன்ற குழு விசாரணை நடத்துகிறது.
பர்படாசில் நேற்று நடந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய நியூஸீலாந்து அணி 20 ஓவர் முடிவில் 134 ரன்கள் எடுத்திருந்தது.
134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களே எடுத்து ஒரு ரன்னில் தோல்வி அடைந்தது. அதோடு இந்த போட்டியில் இருந்தும் வெளியேறியது.
பாகிஸ்தான் அணியின் இந்த மோசமான ஆட்டம் குறித்து அந்நாட்டு நாடாளுமன்ற குழு விசாரணை நடத்த உள்ளது.