Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெயவ‌ர்‌த்தனே அ‌திரடி‌யி‌ல் இல‌ங்கை வெ‌ற்‌றி

Advertiesment
ஜெயவ‌ர்‌த்தனே அ‌திரடி‌யி‌ல் இல‌ங்கை வெ‌ற்‌றி
பார்படாஸ் , சனி, 8 மே 2010 (10:35 IST)
20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியி‌ல் நே‌ற்‌றிரவு நட‌ந்த ஆ‌ட்ட‌த்‌தி‌ல் மே‌ற்‌கி‌ந்‌திய அ‌ணியை 57 ர‌ன்க‌ள் ‌வி‌த்‌தியாச‌த்த‌ி‌ல் இல‌ங்கை அ‌ணி ‌வீ‌‌ழ்‌த்‌தியது.

சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் 'எப்' பிரிவில் நடந்த போட்டியில் இலங்கை- மே‌ற்‌கி‌‌ந்‌திய அணிகள் மோதின. பூவா தலையா வெ‌ன்ற முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 3விக்கெட் இழப்பிற்கு 195 ரன் எடுத்தது.

அதிகபட்சமாக ஜெயவர்த்தனே 56 பந்துகளில் 98 ரன் எடுத்தார். இதில் 9 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும்.

பின்னர் ஆடிய மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவுக‌ள் அ‌ணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 138 எடுத்தது. இதையடுத்து இலங்கை அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சர்வான் 33 பந்துகளில் 28 ரன் எடுத்தார்.

Share this Story:

Follow Webdunia tamil