இருபதுக்கு 20 ஓவர் உலக கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே அணியை டக்வொர்த் முறையில் 14 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு நுழைந்தது.
மேற்கிந்திய தீவில் நடந்த வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கயானாவில் நடந்த ஆட்டத்தில் இலங்கை-ஜிம்பாப்வே அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 173 ரன் எடுத்தது. அதிகபட்சமாக ஜெயவர்த்தனே அதிகபட்சமாக 64 பந்துகளில் 100 ரன் எடுத்தார். இதில் 10 பவுண்டரிகளும், 4 சிக்சரும் அடங்கும்.
பின்னர் களம் இறங்கிய ஜிம்பாப்வே அணி 1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 4 ரன் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டத்தின் ஒவர் குறைக்கப்பட்டது.
11 ஓவர்களில் 106 ரன் எடுத்தால் வெற்றி என்று விளையாடிய ஜிம்பாப்வே 5 ஒவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 29 ரன் மட்டுமே எடுத்தது. மீன்டும் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் முறையில் இலங்கை அணி 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.