Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அயர்லாந்தை சுருட்டியது மே.இ. தீவுகள்!

Advertiesment
அயர்லாந்தை சுருட்டியது மே.இ. தீவுகள்!
, சனி, 1 மே 2010 (11:25 IST)
மேற்கிந்தியத் தீவுகளில் நேற்று துவங்கிய இருபதுக்கு 20 உலக‌க் கோ‌ப்பை கிரிக்கெட் போட்டிகளில், அயர்லாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் தனது சொந்த மண்ணில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது மே.இ. தீவுகள் அணி.

பூவா - தலையா வென்று முதலில் களமிங்கிறய மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்கள் எவரும் பெரிய எண்ணிக்கையை எட்டவில்லை. ·பிளட்சர் 19, சந்தர்பால் 14, பிராவோ 18, சர்வாண் 24, சாம்மி 30 என எடுத்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மேற்கிந்தியத் தீவுகள் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 138 ரன்களை எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணியின் வில்சன் மட்டும் அதிகபட்சமாக 17 ரன்கள் எடுத்தார். மற்ற எவரும் ஒற்றை இலக்கத்தை கடக்கவில்லை. ராம்பால் 3 விக்கெட்டுகளையும், சாம்மி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

16.4 ஓவர்களில் அயர்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 68 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதனையடுத்து தனது சொந்த மண்ணில் 70 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது மேற்கிந்தியத் தீவுகள் அணி.

30 ரன்கள், 3 விக்கெட்டுகள், 4 கேட்ச்கள் பிடித்த சாம்மி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil