பன்றிக் காய்ச்சல் நோய் கண்டறிய 7 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலித்து வந்த தனியார் ஆய்வகங்கள் ரூ.3 ஆயிரம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்களின் நலன் கருதி, லாப நோக்கமின்றி பன்றிக் காய்ச்சல் நோய் கண்டறிய தரமான ஆய்வக பரிசோதனையான ஆர்டி-பிசிஆர் செய்வதற்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை இருந்த கட்டணத்தை குறைத்து ரூ.3 ஆயிரம் மட்டுமே ஓரே சீரான முறையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஆய்வகங்கள் மக்களிடம் கட்டணமாக பெற வேண்டும் என அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் உத்தரவிட்டார். இதை அங்கீகரிக்கப்பட்ட ஆய்வக உரிமையாளர்களும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்.
பன்றிக் காய்ச்சல் நோய் குறித்த பரிசோதனை விவரங்களை தினமும் அரசுக்கு உடனுக்குடன் தெரிவிக்க அனைத்து அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
மேலும், இந்த தனியார் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் பரிசோதனை அரசின் கிங் நிலைய ஆய்வகத்தின் மூலமாக தரக் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டு சரியான ஆய்வக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.