பன்றிக் காய்ச்சலால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள புனேவில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதால், அந்நகரில் இந்நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி சிகிச்சைக்காக புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்தீப் டேனி (35), நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சுகாதாரத் துறை அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
இதுதவிர, பன்றிக் காய்ச்சல் நோய் கண்டறியும் பரிசோதனையின் போது புனேவைச் சேர்ந்த மேலும் 6 பேருக்கு பன்றிக் காய்ச்சல் தாக்குதல் இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.