தமிழகத்தில் பன்றி காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி பலி
, செவ்வாய், 17 ஏப்ரல் 2012 (15:50 IST)
பன்றி காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி ஒருவர் சென்னையில் இன்று உயிரிழந்தார். இவரை தொடர்ந்து தமிழகத்தில் பன்றி காய்ச்சல் நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
விழுப்புரத்தை சேர்ந்த கல்லூரி மாணவி நிவேதா, சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். பன்றி காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்ட மாணவி நிவேதா சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த மாணவி நிவேதா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பன்றி காய்ச்சல் நோய் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.இதனிடையே, கோவை மாநகராட்சியில் ஓட்டுநராக பணியாற்றி வந்த செல்வராஜ் என்பவருக்கு பன்றி காய்ச்சல் நோய் அறிகுறி தென்பட்டதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்த விவசாயி கந்தசாமி அண்மையில் உயிரிருந்தார். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பன்றி காய்ச்சல் நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.