Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பன்றி காய்ச்சல் தாக்கிய கர்ப்பிணிக்கு சுக பிரசவம்

Advertiesment
பன்றி காய்ச்சல் தாக்கிய கர்ப்பிணிக்கு சுக பிரசவம்
, வியாழன், 17 செப்டம்பர் 2009 (12:11 IST)
மகாராஷ்டிராவில் பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு சுகபிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு பன்றிக் காய்ச்சல் பா‌தி‌ப்பு இ‌ல்லை எ‌ன்பது ‌ம‌கி‌ழ்‌ச்‌சியான தகவலாகு‌ம்.

புனேயில் மட்டும் இந்த நோயால் பலியானவர்கள் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், இங்குள்ள சசூன் மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரும் இளம்பெண்ணுக்கு சுக பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து சசூன் மருத்துவமனை தலைமை மரு‌த்துவ‌ர் அருண் ஜாம்கர் கூறுகையில், 8 மாத கர்ப்பிணி யான 19 வயது இளம்பெண் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு எங்கள் மருத்துவமனைக்கு கடந்த 12ம் தேதி வந்தார்.

அவரை பரிசோதனை செய்ததில், பன்றி காய்ச்சல் இருப்பது தெரிந்தது. அவருக்கு கடந்த திங்களன்று சுக பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு பன்றி காய்ச்சல் இல்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழந்தைக்கும் டாமிப்ளு மாத்திரை கொடுக்கப்படுகிறது என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil