உலகையே அச்சுறுத்தி வரும் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு இதுவரை 2,840 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார மையம் (WHO) தெரிவித்துள்ளது.
இதுமட்டுமின்றி உலகம் முழுவதும் 2.54 லட்சம் பேருக்கு பன்றிக் காய்ச்சல் நோய்த் தாக்குதல் இருப்பது தெரியவந்துள்ளதாக WHO மூத்த அதிகாரி கிரிகோரி ஹர்டில் ஜெனீவாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
உலகம் முழுவதும் பன்றி காய்ச்சல் நோயின் தீவிரம் அதிகரித்து வருவதால், துரதிருஷ்டவசமாக இந்நோய்க்கு பலியாகும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதேவேளையில், H1N1 வைரஸ் தனது இயல்தன்மையை மாற்றிக் கொண்டதற்கான அறிகுறி எதுவும் இதுவரை தென்படவில்லை என்றும் அவர் கூறினார்.