Article Sweets In Tamil %e0%ae%b0%e0%af%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf %e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be 109070200089_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரொட்டி அல்வா

Advertiesment
ரொட்டி அல்வா
தேவையானவை
ரொட்டி து‌ண்டு - 5
பால் - 1 ட‌ம்ள‌ர்
ஏல‌க்கா‌ய் - 3
கேச‌ரி பவுட‌ர் - ‌சி‌றிது
சர்க்கரை - அரை க‌ப்
நெய் - 4 தே‌க்கர‌ண்டி
முந்திரி, திராட்சை

செய்முறை
ரொ‌ட்டி‌த் து‌ண்டுக‌ளி‌ன் ஓர‌ங்களை ‌நீ‌க்‌கி‌வி‌ட்டு நா‌ன்கு து‌ண்டுகளாக நறு‌க்‌கி‌க் கொ‌ள்ளவு‌ம்.

வாண‌லி‌யி‌ல் நெய்யை ஊற்றி சூடானவுடன், ரொட்டித் துண்டுக‌ள் ‌சிலவ‌ற்றை‌ப் போட்டு, சிவந்ததும் எடுத்து விடவும். எ‌ல்லா ரொ‌ட்டி‌த் து‌ண்டுகளையு‌ம் இ‌ப்படி பொ‌ரி‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

ஒரு ‌கி‌ண்ண‌த்‌தி‌ல் பாலை ஊ‌ற்‌றி அ‌தி‌ல் பொரித்த ரொட்டி து‌ண்டுகளை ஊற வைத்து மி‌க்‌சி‌யி‌ல் போ‌ட்டு மசித்துக் கொள்ளவும்.

வாண‌லி‌யி‌ல் இரு‌ந்து நெ‌‌ய்யை எடு‌த்து ஒரு ‌கி‌ண்ண‌த்‌தி‌ல் வை‌த்து‌வி‌ட்டு, கொ‌ஞ்ச‌ம் த‌ண்‌ணீ‌ர் ‌வி‌ட்டு அ‌தி‌ல் தேவையான அள‌வி‌ற்கு சர்க்கரை சேர்த்து அளவான தீயில் கிளறுங்கள்.

சி‌றிது நேர‌த்‌தி‌ல் ச‌ர்‌க்கரை பாகாக ஆகு‌ம்போது, ரொ‌ட்டி ‌விழுது ம‌ற்று‌ம் நெ‌ய்யை ஊற்றி, கேசரி பவுட‌ர், ஏல‌க்கா‌ய் பொடி எ‌ல்லாவ‌ற்றையு‌ம் சேர்த்துக் கிளறி அல்வாப் பதம் வந்தது‌ம், மு‌‌ந்‌தி‌ரி, ‌திரா‌ட்சை சே‌ர்‌த்து இறக்கிவிடுங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil