Publish Date: Sat, 02 Jan 2010 (15:04 IST)
Updated Date: Sat, 02 Jan 2010 (15:04 IST)
வேண்டியவை:
ரவா ஒரு கப்
சர்க்கரை ஒன்றேகால் கப்
ஏலக்காய் 6
முந்திரி பாதாம் பருப்புகள் 8
நல்ல நெய்கால்கப்பிற்கும் சிறிது அதிகம்
செய்முறை:
ரவாவை வாணலியில் இட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். ரவா ஆறினவுடன் மிக்ஸியில் போட்டு மெல்லிய மாவாக அரைத்துக் கொள்ளவும்.
சர்க்கரையையும், ஏலக்காயையும் தனித்தனியாக மிக்ஸியில் அறைத்துக் கொள்ளவும். முந்திரி, பாதாம் பருப்பையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும்.
ஒரு அகலமான தட்டில் அரை கப் ரவாவை கலவையில் போட்டு சின்ன வாணலியில் நான்கு ஸ்பூன் நெய்யை நன்றாகக் காய்ச்சி மாவின் மேல் கொட்டி ஒரு ஸ்பூனால் கலக்கவும். நெய்சூட்டில் சர்க்கரை சற்று இளகி உருண்டை பிடிக்க வரும். சற்று சூட்டுடனே உள்ளங்கையில் மாவை வைத்து விரல்களால் அழுத்தி சிறிய லட்டுகளாகப் பிடிக்கவும்.
இதே முறையில் மிகுதிக் கலவையையும் சூடான நெய் விட்டு லட்டுகளாகப் பிடிக்கவும். வாயில் போட்டால் லட்டுகள் கரையும்.