Publish Date: Fri, 09 Jan 2009 (13:03 IST)
Updated Date: Fri, 09 Jan 2009 (10:46 IST)
ரவா கேசரி செய்யும் முறை. எளிய இந்த இனிப்பை செய்து உண்டு பாருங்கள்.
தேவையான பொருட்கள் :
ரவை 100 கிராம்
சக்கரை 500 கிராம்
நெய் 200 கிராம்
கேசரிப் பவுடர் ஒரு சிட்டிகை
ஏலக்காய் 7
முந்திரி பருப்பு 7
செய்முறை :
சிறிதளவு நெய்யை விட்டு, ரவையை சிவக்க வறுத்துக் கொள்ளவும்
முந்திரி பருப்பையும் வறுத்துக் கொண்டு, வறுத்த ரவையில் இரண்டரை ஆழாக்கு முதல் மூன்றாழாக்கு தண்ணீர் விட்டு கிளறி, ரவை நன்றாக வெந்த பின் சக்கரையைப் போட்டுக் கிளறவும்.
சக்கரையைப் போட்டதும் இளகிக் கொண்டு, கிளறக் கிளறக் கெட்டியாகும். அதன் பிறகு, பாக்கி நெய்யையும் விட்டு, கேசரிப் பவுடரைப் போட்டுக் கிளறி இறக்கி, ஏலப்பொடி, பச்சை கற்பூரம் இவற்றைப் போடவும்.