Publish Date: Tue, 12 Nov 2013 (13:46 IST)Updated Date: Tue, 12 Nov 2013 (13:45 IST)
FILE
வீட்டில் பண்டிகை நேரத்தின்போது புதிய வகை இனிப்பு வகைகளை செய்ய விருப்பப்படும் பெண்கள், மிக எளிமையாக தயார் செய்யக்கூடிய பல இனிப்புகளை செய்ய முயற்சிப்பதில்லை. மிக எளிமையாக தயாராகும் இந்த பால் அல்வாவை ஒருமுறை செய்து சுவைத்தால் வீட்டின் அனைத்து விசேஷங்களிலும் இந்த இனிப்பு தவறாமல் இடம்பிடித்துவிடும்.
கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்துச் சூடானவுடன், எலுமிச்சம் பழச்சாறு ஊற்றிக் கைவிடாமல் கிளறி தயிர் பதம் வந்தவுடன், விட்டு விட்டுக் கிளறவும்.
பாலின் அளவு நான்கில் ஒரு பங்காக வற்றியவுடன், அதில் சர்க்கரையைக் கொட்டி மீண்டும் கிளறவும்.
பிறகு நெய்யை ஊற்றி, சிறிதளவு கெட்டியாகி திரட்டுப் பால் பதம் வந்தவுடன், பன்னீரைத் தெளித்துப் பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி, சாரப்பருப்பு போட்டுக் கிளறிவிடவும்.
இதனை சூடாகவும் பரிமாறலாம், ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போதும் பரிமாறலாம்.