Publish Date: Fri, 09 Oct 2009 (16:16 IST)
Updated Date: Fri, 09 Oct 2009 (15:59 IST)
தேவையானவை
பால் - 2 கப்
சர்க்கரை - முக்கால் கப்
நெய் - அரை கப்
ரவை - கால் கப்
செய்யும் முறை
ஒரு அடி கனமாக வாணலியில் ரவையைப் போட்டு வறுத்து எடுக்கவும்.
பின்னர் அதே வாணிலியில் பாலை ஊற்றி மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.
பின்னர் ரவையை சேர்த்து வேக விட்டு, அதில் சர்க்கரை மற்றும் நெய்யை சேர்த்து கிளறவும்.
சர்க்கரை மற்றும் நெய் உருகி பின்னர் அல்வா பதத்திற்கு வந்ததும் இறக்கவும்.
நெய் தடவிய கிண்ணத்தில் அல்வாவை எடுத்து வைக்கவும்.
தேவைப்பட்டால் இறுதியாக பாதாம், பிஸ்தா பருப்புகளை பொடி செய்து சேர்க்கலாம்.
இதனை எல்லோரும் எளிதாக செய்யலாம்.