Publish Date: Thu, 08 Apr 2010 (11:54 IST)
Updated Date: Thu, 08 Apr 2010 (11:54 IST)
தேவையான அளவு
சேமியா - 1 கப்
நெய் - 3/4 கப்
சர்க்கரை - 1 கப்
முந்திரிப் பருப்பு - 1 டீஸ்பூன்
கேசரிப்பவுடர் - சிறிதளவு
ஏலப்பொடி - சிறிதளவு
செய்யும் முறை
சேமியாவை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் தண்ணீர் ஊற்றிக் கொதித்து வரும் போது வறுத்த சேமியாவையும், ஏலக்காய் பொடியையும் போட்டுக் கிளறி வேக விடவும்.
ஒரு சிறிய கிண்ணத்தில் கேசரிப் பவுடர் போட்டு தண்ணீர் ஊற்றிக் கரைத்து வேகும் சேமியாவில் சேர்க்கவும்.
வெந்ததும் சர்க்கரையைப் போட்டுக் கிளறி விடவும்.
தனியாக ஒரு வாணலி வைத்து 2 தேக்கரண்டி நெய் ஊற்றி முந்திரியை வறுத்து வைத்துக் கொள்ளவும்.
மீதமிருக்கும் நெய்யையும், வறுத்த முந்திரியையும் போட்டுக் கிளறி சூடாக பரிமாறவும்