Article Sweets In Tamil %e0%ae%95%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%88 %e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be 110060200035_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோதுமை அல்வா

Advertiesment
கோதுமை அல்வா
தேவையான பொருட்கள்:

சம்பா கோதுமை - 4 டம்ளர்
சர்க்கரை - 6 டம்ளர்
நெய் - 4 டம்ளர்
கேச‌ரி பவுடர் - 1/4 தே‌க்கர‌ண்டி
ஏலம், முந்திரி, திராட்சை - சிறிதளவு
தண்ணீர் - 1/2 டம்ளர்

செய்முறை:

முதலில் கோதுமையை ஊறவைக்கவும். பிறகு அதைக் கழுவி, தண்ணீரைக் களைந்து ஆட்டி, பால் பிழிந்து, தனியாக வைக்கவும்.

சர்க்கரை, தண்ணீர் இரண்டையும் சிறிது கொட்டிக் கம்பிப்பதம் வரும்வரை காய்ச்சி அதில் கோதுமைப் பாலை ஊற்றி, கிளறுங்கள்.

கலவை கெட்டியானவுடன் 2 டம்ளர் நெய்யை ஊற்றி, பிறகு நெய்யில் வறுத்த முந்திரி, கேச‌ரி பவுடர், திராட்சை மற்றும் ஏலப்பொடி இவற்றைப் போட்டுக் கிளறி இறக்கி வைக்கவும்.

சுவையாக இருக்கும் இந்த கோதுமை அல்வாவின் செய்முறையும் எ‌ளிதுதா‌ன்.

Share this Story:

Follow Webdunia tamil