Publish Date: Wed, 26 Aug 2009 (17:23 IST)
Updated Date: Wed, 26 Aug 2009 (17:23 IST)
தேவையானப் பொருட்கள் :
நிலக்கடலைப் பால் - 7 கப்
கேரட் துருவல் - 4 கப்
சர்க்கரை - 4 கப்
நெய் - 2 கப்
ஏலக்காய் - 12
கிஸ்மிஸ் - 1 கப்
செய்முறை :
நிலக்கடலைப் பாலை பத்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.
கேரட் துருவலை அந்தப் பாலில் போட்டு வேக வைக்கவும்.
பால் சுண்டியதும் நெய்யைச் சேர்த்து கால் மணி நேரம் நன்கு கிளறி பொரியலாக்கவும்.
பிறகு அதோடு சர்க்கரை சேர்த்து மேலும் ஐந்து நிமிடம் கிளறவும்.
கிஸ்மிஸ், ஏல அரிசித் தூள் சேர்த்து கிளறி அல்வா பதம் வந்ததும் எடுத்துக் கொள்ளவும்.
இளஞ்சூடான பதத்தில் பரிமாறவும்.