Publish Date: Mon, 08 Jun 2009 (16:21 IST)
Updated Date: Mon, 08 Jun 2009 (16:21 IST)
மைக்ரோவேவில் கேரட் அல்வா செய்வது எப்படி என்று தெரிந்துகொள்வோமா?
தேவையானப் பொருட்கள்
1/4 கிலோ கேரட்
1 கப் சர்க்கரை
3 தேக்கரண்டி நெய்
1 கப் தண்ணீர்
ஒரு சிட்டிகை கேசரி பொடி
4 ஏலக்காய்
10 வறுத்த முந்திரி
செய்முறை
கேரட்டை துருவிக்கொள்ளுங்கள்.
ஏலக்காயை பொடி செய்துகொள்ளுங்கள்.
பவுல் அடியில் நெய் தடவிக்கொள்ளுங்கள்.
துருவிய கேரட், ஏலக்காய் பொடி, சர்க்கரை, தண்ணீர், கேசரி பொடி, முந்திரி, நெய் அனைத்தையும் ஒன்றாக கலந்து மைக்ரோவேவில் பவுல்-ல் 10 நிமிடம் high(HI)-யில் வைக்கவும்.
இடையில் ஒன்றிரண்டு முறை கலவையை கலக்கவும்.
மைக்ரோவேவ் கேரட் அல்வா ரெடி.
ஒவ்வொரு மைக்ரோவேவிற்கும் நேரம் வித்தியாசப்படலாம், ஒன்றிரண்டு முறை செய்து பார்த்தால் சரியாக வரும்.