Publish Date: Thu, 16 Jul 2009 (10:36 IST)
Updated Date: Sun, 23 Feb 2014 (00:42 IST)
வடை என்றாலே குழந்தைகளுக்குப் பிடிக்கும். அதில் இனிப்பு வடை என்றால் பிடிக்காமல் போய்விடுமா?
தேவையானவை
உளுத்தம்பருப்பு - 1/4 கிலோ
பச்சரிசி - கால் ஆழாக்கு
கல்கண்டு - ஒரு கப்
ஏலக்காய் - 5
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
உளுத்தம்பருப்பு மற்றும் அரிசியை 1 மணி நேரம் ஊற வைத்து அரைக்க வேண்டும்.
வடைக்கு மாவு அரைக்கும் போது மொத்தமாக நிறைய தண்ணீர் ஊற்றாமல் அவ்வப்போது தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைக்க வேண்டும்.
மாவு வடை பதத்திற்கு நன்கு அரைபட்டதும், கல்கண்டை கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கழுவிவிட்டு மாவுடன் சேர்த்து அரைக்கவும். அப்போது ஏலக்காயையும் பொடித்து சேர்த்துக் கொள்ளவும்.
கல்கண்டை சேர்த்த பின் மாவை தண்ணீர் விடாமல் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
வாணலியில் வடை பொறிக்கத் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி நன்கு காய விடவும்.
பிறகு சிறுந்தீயில், மாவை சிறு வடைகளாக தட்டி போட்டு நன்கு வேக விட்டு எடுங்கள்.