Publish Date: Fri, 10 Sep 2010 (18:03 IST)
Updated Date: Fri, 10 Sep 2010 (18:03 IST)
தேவையானப் பொருட்கள்:
அவல் 1 கிலோ
சர்க்கரை 1 கிலோ
ரோஸ் வாட்டர் தேவையான அளவு
நிலக்கடலைப் பருப்பு 200 கிராம்
செய்முறை:
அவலில் கலந்துள்ள அசுத்தங்களை முதலில் அகற்றவும். கற்களை நீக்கவும்.
பிறகு ஒரு சுத்தமான துணியை வெயிலில் விரித்துப் போட்டு அதன் மேல் அவலை பரவலாகப் பரப்பவும்.
நன்கு காய்ந்த பிறகு அதை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நிலக்கடலைப் பருப்பை லோசாக வறுத்து எடுத்து தேய்த்துப் புடைத்து நன்கு சுத்தம் செய்து சொத்தைப் பருப்புகளை அகற்றவும்.
சர்க்கரையை பாகு காய்ச்சி அதில் முதலில் அவலைச் சேர்க்கவும். நன்கு கிளறிய பிறகு நிலக்கடலைப் பருப்பை போட்டு மீண்டும் கிளறவும்.
அதன்பிறகு ரோஸ் வாட்டர் தேவையான அளவு சேர்த்துக் கிளறவும்.
அடுப்பில் இருந்து இறக்கி சூடு ஆறுவதற்கு முன்னதாக லட்டுகளாக உருட்டிக் கொள்ளவும்.
அவ்வளவுதான் அவல் லட்டு தயார்.