Article Sweets In Tamil %e0%ae%85%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d %e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d 108101000020_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அவல் பாயசம்

-ச‌சிகலா

Advertiesment
அவல் பாயசம்
இது ப‌ண்டிகை கால‌ம். எ‌ப்போது‌ம் செ‌ய்ததையே செ‌ய்து ச‌லி‌ப்படை‌ந்தவ‌ர்க‌ள் பு‌திதாக எதையாவது செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌நினை‌ப்பா‌ர்க‌ள். அவ‌ர்களு‌க்காக அவ‌ல் பாயச‌ம்.

தேவையான் பொருள்கள்:

அவல் - 250 கிராம்
சர்க்கரை - 200 கிராம்
பால் - அரை லிட்டர்
முந்திரி - 10 கிராம்
ஏலக்காய் - 4
காய்ந்த திராட்சை - 10 கிராம்
நெய் - 50 கிராம்

செய்முறை:

பாலை காய்ச்சிவைத்து கொள்ள வேண்டும்.

ஏலக்காய் சர்க்கரை சிறிது சேர்த்து மிக்ஸியில் அரைத்து தூள் செய்து வைத்து கொள்ளவும்.

நெய் விட்டு லேசாக சூடானதும் முந்திரியை பொ‌ன்‌னிறமாக வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.

அதிலேயே அவலை லேசாக வறுத்து கொள்ள வேண்டும்.

பிறகு எடுத்து 5 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

அவ‌ல் ஊ‌றியது‌ம், வா‌ய் அக‌ண்ட பா‌த்‌திர‌த்‌தி‌ல் அவலை போ‌ட்டு வேக வை‌க்கவு‌ம்.

அவ‌ல் வெந்த பிறகு சர்க்கரை, பால், ஏலக்காய் தூள் அனைத்தும் போட்டு நன்கு கிளறவும். முந்திரி, திராட்சையை சேர்க்கவும்.

சுவையான அவல் பாயசம் தயா‌‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil