நாவில் எச்சில் ஊறும் கோதுமை அல்வா செய்ய...!!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
கோதுமை மாவு - 1/4 கப்
சர்க்கரை - 1/2 கப்
தண்ணீர் - முக்கால் கப்
நெய் - கால் கப்
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
பாதாம் - 4 (நறுக்கியது)

செய்முறை:
 
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/4 கப் நெய் ஊற்றி சூடானதும், அதில் கோதுமை மாவு சேர்த்து கட்டி சேராதவாறு தொடர்ந்து 20 நிமிடம்  நன்கு கிளறி விட வேண்டும். 
 
பின்னர் அதில் முக்கால் கப் தண்ணீர் ஊற்றி நன்கு வேகமாக கிளறி விட வேண்டும். மாவானது வாணலியில் ஒட்டாமல் தனியாக வர ஆரம்பிக்கும் போது,  சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

சர்க்கரை நன்கு உருகி அல்வா நன்கு திரண்டு வர ஆரம்பிக்கும் போது, அதில் மீதமுள்ள நெய் ஊற்றி, ஏலக்காய்  பொடி தூவி கிளறி, இறுதியில் பாதாமை தூவி இறக்கினால், சுவையான கோதுமை அல்வா தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் மொபைல் போனை பேண்டின் முன் பாக்கெட்டில் வைக்கிறீர்களா? விந்தணு உற்பத்தி பாதிக்கும்..

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?!.. ஆய்வில் தகவல்!..

பில் போடும் பேப்பரால் ஆண்களுக்கு வரும் ஆபத்து!.. ஆய்வில் அதிர்ச்சி!...

கோடையில் வரும் நோய்கள்!.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?...

வெயில் நேரத்தில் எதையெல்லாம் சாப்பிடக்கூடாது?.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments