சுவை மிகுந்த சேமியா கேசரி செய்ய...!!

Webdunia
தேவையான பொருள்கள்:
 
சேமியா - 1 கப் 
சீனி - 3/4 கப் 
முந்திரிப்பருப்பு - 10
நெய் - 5 மேஜைக்கரண்டி 
ஏலக்காய் பவுடர் - 1/4 தேக்கரண்டி 
கேசரி கலர் - சிறிது 
தண்ணீர் - 1 1/4 கப்
                                  
செய்முறை:
 
அடுப்பில் கடாயை வைத்து 3 மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் வைத்து முந்திரிப்பருப்பை போட்டு வறுக்கவும். முந்திரிப்பருப்பு பொன்னிறமானதும் அதனுடன் சேமியாவை சேர்த்து வறுக்கவும்.                                                                            
 
பிறகு அதனுடன் 1 1/4 கப் தண்ணீர், கேசரி கலர் சேர்த்து சேமியா வேகும் வரை நன்கு கிளறவும். சேமியா வெந்தவுடன் சர்க்கரையை சேர்த்து கேசரி கெட்டியாகும்  வரை நன்கு கிளறவும். இறுதியில் மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி நெய்யும், ஏலக்காய் பவுடரும் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். சூடு ஆறியவுடன் ஒரு  பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். சுவையான சேமியா கேசரி தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முள்ளங்கியை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் பலன்கள்.. பயனுள்ள தகவல்கள்..!

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்.. பயனுள்ள தகவல்..!

சிறுநீரக கற்களைக் கரைக்க உதவும் உணவு முறைகள்.. பயனுள்ள தகவல்..!

சரும அழகுக்காக பயன்படுத்தப்படும் பொருட்களால் ஆபத்து.. எச்சரிக்கை தேவை..!

பிறரின் அழுத்தத்திற்காக குழந்தை பெற வேண்டாம்: தம்பதிகளுக்கான முக்கிய ஆலோசனைகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments