Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவை மிகுந்த ரவை டோக்ளா செய்ய...!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
கோதுமை ரவை - ஒரு கப் (சிறிய ரவை)
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - சிறிய துண்டு
கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
புளித்த தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
ஈனோ ஃப்ரூட் சால்ட் - சிறிதளவு
தேங்காய் துருவல் - ஒரு டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - அரை டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
கடுகு - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
பொடித்த சர்க்கரை - அரை டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
 
கோதுமை ரவையை சிறிது எண்ணெய்யில் லேசாக வறுத்தெடுக்கவும். இஞ்சியை தோல் சீவி, பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்துக்  கொள்ளவும். கோதுமை ரவையை ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, கொத்தமல்லி, ஈனோ ஃப்ரூட் சால்ட்,  மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், சீரகம் சேர்க்கவும். 
 
இதனுடன் தயிர், சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியான இட்லி மாவு பதத்தில் கரைக்கவும். இதை அரை மணிநேரம் ஊறவிடவும். ஒரு இஞ்ச் குழிவுள்ள வட்ட தட்டில் எண்ணெய் தடவி, கரைத்த மாவை பரப்பவும், இட்லி பாத்திரத்தில் இதை 15 நிமிடம் ஆவியில் வேகவிடவும்.  பின்பு வெளியே எடுக்கவும். நன்கு பஞ்சுப் போல வெந்ததும் எடுத்துவிடவும்.
 
கடுகை எண்ணெய்யில் வெடிக்கவிட்டு இதன் மேலே பரவலாக போடவும். கொத்தமல்லி, தேங்காய் துருவலையும் பரவலாக தூவவும். பொடித்த சர்க்கரையில் சிறிது தண்ணீர் எலுமிச்சைச் சாறு கலந்து மேலாக ஊற்றவும். சுவையான கோதுமை ரவை டோக்ளா தயார். இதனை  விரும்பிய வடிவத்தில் துண்டுகள் செய்து புதினா ஸ்வீட் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments