Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அருமையான சுவையில் சேமியா பாயாசம் செய்ய !!

Advertiesment
அருமையான சுவையில் சேமியா பாயாசம் செய்ய !!
, புதன், 9 பிப்ரவரி 2022 (16:03 IST)
தேவையான பொருட்கள்:

சேமியா - 1/2 கப்
சக்கரை - 1/2 கப்
பால் - 1/2 கப்
நெய் - 2 தேக்கரண்டி
முந்திரி - 6
உலர் திராட்சை - 12
ஏலக்காய் - 1
உப்பு - ஒரு சிட்டிகை
தண்ணீர் - 2 கப்



செய்முறை:

ஒரு அடி  கனமான பாத்திரத்தில், நெய் சூடு செய்து, மிதமான தீயில், முதலில் உடைத்த முந்திரிப் பருப்பை, பொன்னிறமாக வறுக்கவும். வறுபட்டதும், திராட்சையை சேர்த்து, உப்பும் வரை வறுத்து தனியே ஒரு கிண்ணத்தில் எடுத்துவைத்துக்கொள்ளவும்.

அதே நெய்யில், சேமியாவை சேர்த்து வறுக்கவும். தீ எப்பொழுதும் மிதமாகவே வைத்துக்கொள்ளவும். பொன்னிறமாக ஆங்காங்கே மாறியதும், தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும். தண்ணீரை கொதிக்க வைக்கவும். அதில் ஒரு சிட்டிகை உப்பு, வறுத்த சேமியா சேர்க்கவும். சேமியாவை தூவினாற்போல சேர்த்து, கலக்கவும். இல்லை என்றால்ல் கட்டி பிடிக்கும். சேமியா மிருதுவாக வேகும் வரை கொதிக்கவிடவும்.

பின்னர் சக்கரை, ஏலக்காய்  சேர்த்து கலக்கவும். 2 நிமிடங்கள் மேலும் கொதிக்க விடவும். மிதமான தீயில் வைத்து, பால் சேர்க்கவும். கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து, வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: ஆறிய பின், கெட்டியாகினால், பாலை சூடு செய்து சேர்த்து கலந்துகொள்ளலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அன்றாட உணவில் வாழைக்காய் சேர்த்துக்கொள்வதால் என்ன நன்மைகள்....?